Autism: Red Flag Signs
ஓட்டிசம்: சிவப்பு சமிக்ஞைகள்
- குழந்தைகள் பிறந்து ஆறு மாதமாகிய பின்பும் பெரியளவான புன்சிரிப்போ, அல்லது ஏனைய உணர்வு பூர்வமான, மகிழ்ச்சியான வெளிப்பாடுகளோ இல்லாதிருத்தல்.
- ஒன்பது மாதமாகியும் ஒலிகளையோஇ முகபாவ வெளிப்பாடுகளையோ, புன்சிரிப்பையோ கொடுத்து வாங்கும் திறனற்று இருத்தல்.
- பன்னிரண்டு மாதங்களாகியும் மழலை ஒலிகள் வெளிப்படாது இருத்தல்.
- பன்னிரண்டு மாதங்கள் ஆகியும் ஒருவரைப் பார்த்து ஒன்றைச் காட்டும், சுட்டிக் காட்டும், அடைய எத்தனிக்கும் அல்லது கையசைக்கும் திறன்கள் இல்லாதிருத்தல்.
- பதினாறு மாதங்கள் ஆகிய பின்பும் ஒரு வார்த்தையேனும் பேசாது இருத்தல்.
- இருபத்திநான்கு மாதங்கள் ஆன பின்பும் அர்த்தமுள்ள இரு சொற்களைச் சேர்த்து சொந்தமாகப் பேசுகின்ற திறன் இல்லாதிருத்தல் (மற்றவர்கள் செய்வதைப் பார்த்து அதுபோலச் செய்தல் அல்லது அவர்கள் சொன்னதைத் திருப்பிச் சொல்லுதல் ஆகியன இதனுள் அடங்காது).
- எந்த வயதில் இருந்தாலும்இ ஏற்கனவே விருத்தியடைந்த மழலை ஒலி, பேச்சு மற்றும் சமூகமயமாதல் திறன்கள் மறைந்து போதல்.
நன்றி
Autism Speaks