Events:

ஓட்டிசம் தொடர்பான அனுபவப் பகிர்வும், களப்பயிற்சியும் 

கிளிநொச்சி கல்வி வலயத்தில் கடமையாற்றும் விசேட கல்வி ஆசிரியர்களுக்கான ஓட்டிசம் தொடர்பான மூன்றுநாள் பயிற்சி நிகழ்வு ஒன்று கடந்த 21.05.2018 முதல் 23.05.2018 யாழ்ப்பாணம், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. மாதவம் நிலையத்தினால் நடத்தப்பட்ட இந்தப் பயிற்சி நிகழ்வினை கிளிநொச்சி வலயக்கல்வி அலுவலகமும், செரண்டிப் சிறுவர் இல்லமும் இணைந்து ஒழுங்கு செய்திருந்தது. 

இந்தபயிற்சி நிகழ்வில் 11 விசேட கல்வி ஆசிரியர்களும், கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமைபுரியும் பேச்சு மற்றும் மொழிசிகிச்சையாளர்இ தொழில்வழி சிகிச்சையாளர் ஆகியோரும் கலந்துகொண்டனர். 

இந்த நிகழ்வில் ஓட்டிசம் பிள்ளைகளை எவ்வாறு புரிந்து கொள்வது? பிள்ளைகளுடன் நேரடியாக வேலை செய்வதற்குத் தேவையான அடிப்படைத் திறன்கள் யாவை? பாடசாலை வகுப்பறை ஒன்றை அங்கு காணப்படும் அடிப்படை வளங்களைக் கொண்டு ஓட்டிசம் பிள்ளைகளுக்கு ஏற்றாற்போல் எவ்வாறு மாற்றியமைப்பது? ஒவ்வொரு பிள்ளைக்குமான தனிப்பட்ட கல்வித் திட்டமிடலினை (Individual Education Plan) எவ்வாறு உருவாக்கி நடைமுறைப்படுத்துவது? போன்ற விடயங்கள் கலந்துரையாடப்பட்டது. 

ஓட்டிசம் உடைய பிள்ளைகளின் மேம்பாட்டிற்காகப் பணியாற்றும் போது, வைத்தியர்கள், பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையாளர், தொழில்வழிச்சிகிச்சையாளர் போன்ற பல்துறைசார் வளவாளர்களுடன்; இணைந்து செயற்படுவதன் முக்கியத்துவம் பற்றியும், ஓட்டிசம் நிலைமையுடைய பிள்ளைகளது கற்றலில் பெற்றோரது பங்களிப்பின் அவசியம் பற்றியும் இந்நிகழ்வில் தெளிவுபடுத்தப்பட்டது.

இம் மூன்றுநாள் நிகழ்வின் ஓர் அங்கமாக, பங்குபற்றுனர்கள் மாதவம் நிலையத்திற்கு வருகைதந்து, அதன் பௌதீக அமைப்பைப் பார்வையிட்டதுடன் அங்கு வழங்கப்படுகின்ற சேவைகள் தொடர்பாகவும் அறிந்து கொண்டனர். 

இப்பயிற்சிக்கு மாதவத்தில் கடமையாற்றும் வைத்தியர், உளவளத்துணையாளர்கள் மற்றும் பேச்சு, மொழிச்சிகிச்சையாளர் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டனர். 

மொழியியல் துறை மாணவர்களுக்கான ஓட்டிசம் விழிப்புணர்வு

யாழ். பல்கலைக்கழகத்தின் மொழியியல் துறையில் கல்விபயிலும் மாணவர்களுக்கு ஓட்டிசம் தொடர்பான அறிமுகம் மற்றும் ஓட்டிச நிலைமைகளில் பேச்சு மற்றும் மொழிச்சிகிச்சையின் பயன்பாடு என்பவற்றைத் தெளிவுபடுத்தும் ஓர் ஆரம்ப விழிப்புணர்வு நிகழ்வு 24.08.2018 அன்று யாழ். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானபீடத்தின் கேட்போர்கூடத்தில் நடைபெற்றது. 

விருத்திக் கோளாறுகள் தொடர்பான அறிமுகம்  யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் பணிமனையில் நடைபெற்ற குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான பயிற்சியின் ஒரு பகுதியாக “ ஓட்டிசம் மற்றும் ஏனைய விருத்திக் கோளாறுகள்” தொடர்பான கலந்துரையாடல் அமர்வு இடம்பெற்றது. இதில் வைத்தியகலாநிதி. திருமதி. தர்மிலா சிவபாதமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டார 

ஓட்டிசம் தொடர்பான அனுபவப் பகிர்வும், களப்பயிற்சியும் 
மொழியியல் துறை மாணவர்களுக்கான ஓட்டிசம் விழிப்புணர்வு
குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி
குடும்பநல உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி

யாழ். மருத்துவ சங்கத்தின் வருடாந்த மருத்துவ மாநாட்டிற்கு முன்னரான நிகழ்வு 

யாழ். மருத்துவ சங்கத்தின் வருடாந்த மருத்துவ மாநாட்டிற்கு முன்னரான நிகழ்வுகளில் ஒன்றாக ஓட்டிசம் தொடர்பான கருத்தமர்வொன்று 2018.08.02 அன்றுகாலை 8.30 மணிதொடக்கம் பிற்பகல் 1 மணிவரை யாழ் பொது நூல் நிலையத்தின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்விற்கு வளவாளர்களாக, தமிழ்நாட்டில் உள்ள வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் கடமையாற்றும் திருமதி. L. பாக்யவதி (Rehabilitation Psychologist) மற்றும் திரு. ஜோசப் ( Occupational Therapist ) ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வினை ஆரம்பித்து உரையாற்றிய உளமருத்துவ நிபுணர் சா. சிவயோகன் கருத்தரங்கின் வளவாளர்கள், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியில் மூளை மற்றும் விருத்திசார் கோளாறுடைய பிள்ளைகளுக்கான சிகிச்சைப் பிரிவில், பேராசிரியர். போல் ரசல் அவர்களோடு இணைந்து பணியாற்றுகின்றார்கள் எனவும், அவர்கள் ஓட்டிசம் நிலைமையுடைய பிள்ளைகளுடன் பணியாற்றுவதில் மிகுந்த தகைமையையும், நீண்டகால அனுபவத்தையும் கொண்டவர்களாக விளங்குகின்றனர் எனவும் குறிப்பிட்டார். மேலும், இவ்வாறான நிகழ்வுகள் தமிழ் மொழியில் நடைபெறுவது மிகவும் பயனுள்ளதாக அமையும் எனவும் உளமருத்துவ நிபுணர் குறிப்பிட்டார்.

இந்தக் கருத்தரங்கில் ஓட்டிசம் நிலைமையுடைய பிள்ளைகளோடு பணியாற்றும் மருத்துவத்துறை மற்றும் கல்வித்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள், பெற்றோர், தன்னார்வத் தொண்டர்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். மூளை மற்றும் விருத்திசார் பிரச்சினைகளை மதிப்பிடுவதற்காக உபயோகிக்கப்படும் பல்வேறு விஞ்ஞான அணுகுமுறைகள் மற்றும் மதிப்பீட்டு நுட்பங்கள் பற்றியும், வேலூர் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரியின் ஓட்டிசம் பிள்ளைகளுக்காக வழங்கப்படும் இடையீட்டுப் படிமுறை மாதிரி பற்றியும் வளவாளர்கள் எடுத்துக் கூறினார்கள். அத்தோடு, மேற்படி தலையீடுகள் மற்றும் பயிற்சிகளில் பெற்றோர்கள் செயலாற்றற் திறனோடு பங்களிக்க வேண்டியதன் முக்கியத்துவம் பற்றியும் அவர்கள் விளக்கமளித்தனர். கருத்தமவர்வின் இறுதியில் இந்நிகழ்வினை நிறைவு செய்வதன் பொருட்டு உரையாற்றிய பொது வைத்திய நிபுணர். தி. குமணன் அவர்கள் வேலூர் கிறிஸ்தவக் கல்லூரியில் தான் கடமையாற்றிய அனுபவத்தினை நினைவு கூர்ந்து வளவாளர்கள் இங்கு வருகை தந்ததற்கு நன்றி தெரிவித்தார். வேலூர் கிறிஸ்தவக் கல்லூரியானது கடந்த காலங்களைப்போல், தொடர்ந்தும் மாதவத்தின் வளர்ச்சிக்கு உதவ வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார். மேற்படி நிகழ்வினைத் தொடர்ந்து வளவாளர்கள் அன்று மாலை மாதவம் – மூளை மற்றும் விருத்திசார் குறைபாடுகளுக்கான நிலையத்திற்கு வருகை தந்து நிலையத்தினைப் பார்வையிட்டதுடன், ஓட்டிசம் இயல்புகளையுடைய சில பிள்ளைகளைப் பார்வையிட்டு, அப்பிள்ளைகளின் பெற்றோர்களுக்குத் தேவைப்பட்ட ஆலோசனைகளையும் வழங்கினார்கள். இந்த வளவாளர்கள் 2018.08.03 வெள்ளிக்கிழமை மீண்டும் மாதவம் நிலையத்திற்கு வருகைதந்தது, நிலையத்தின் செயற்பாடுகளைப் பார்வையிட்டதுடன், மாதவத்தினால் வழங்கப்படும் சேவைகளை மேம்படுத்துவது தொடர்பான தமது ஆலோசனைகளையும் வழங்கினர். தொடர்ந்து 2018.08.04 சனிக்கிழமை காலை வளவாளர்கள் பெற்றோருடனான கலந்துரையாடல் ஒன்றில் கலந்து கொண்டார்கள். இதன்போது அவர்கள் பெற்றோர்களுடைய கேள்விகளுக்குப் பதிலளித்ததுடன், ஓட்டிசம் இயல்புடையபிள்ளைகளைப் புரிந்துகொண்டு அவர்களை முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளையும் வழங்கினர். வேலூர் கிறிதவக் கல்லூரியிலிருந்து வளவாளர்களாக் கலந்து கொண்ட திருமதி டு. பாக்யவதி மற்றும் திரு. ஜோசப் ஆகியோர்களுக்கும், இந்தவளவாளர்களை யாழ்ப்பாணத்திற்கு வரவழைத்த யாழ். மருத்துவ சங்கத்திற்கும் மாதவம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றது. 


Training Workshop on Applied Behaviour Analysis in Jaffna (26-02-2018 – 02-03-2018)

ஓட்டிசத்தால் பாதிக்கப்பட்ட பிள்ளைகளின் நடத்தைகளைப் பகுப்பாய்வு செய்து அவற்றிற்குப் பொருத்தமான இடையீடுகளை வழங்குவது தொடர்பான பயிற்சிப் பட்டறை ஒன்று 26-02-2018 தொடக்கம் 02-03-2018 வரைக்கும் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது. இதில் மாதவத்தில் பணியாற்றும் வளவாளர்களும் கலந்து கொண்டிருந்தார்கள். அமெரிக்காவின் சின்சினாற்றி நகரில் பணியாற்றும் உளவியலாளர் கிம்பேர்ளி குரோகர் (Kimberly Kroger – Geoppinger) அவர்களும், மருத்துவர் திருமதி காவேரி சிவரூபன் அவர்களும் அதில் வளவாளர்களாகப் பணியாற்றினார்கள்.
அந்தப் பயிற்சி தொடர்பான அனுவத்தை அதில் கலந்து கொண்ட ஒருவர் இப்படி விபரிக்கின்றார்.

“The five days (rather six days – including the Saturday) have gone with lots and lots of amazing experiences. I should thank Kaveri as a person who consistently wanted to bring Kim to Jaffna and The IMHO for supporting this (relatively) expensive training – workshop.

There is no doubt that the training – workshop has opened a new avenue in the management of children with ASD and other conditions with behavioural disturbances. I could witness the positive responses and the enthusiasm shown by the participants. I am sure that all of them will incorporate the basics of ABA in their future work. However, we can expect more from people who have already been actively working with children.

Kim’s training was simply wonderful. In almost all the sessions, I could sense her expertise on the subject matter, the dedication she had in her field, and the willingness of transferring her knowledge and skills to the participants in simple language. Perhaps these were the reasons why we were unable to sneak in between the sessions and stayed there throughout the whole day!”