Articles

ஓட்டிசமும் தொடர்பாடல் திறன்களும்

ஓட்டிசம் பிள்ளைகளைப் பொறுத்தவரை, அவர்களது பெற்றௌரது முக்கிய கவலையாகக் காணப்படுவது பிள்ளைகளின் தொடர்பாடல், பேச்சு மற்றும் மொழி விருத்தி பற்றிய விடயங்களாகும். “எனது பிள்ளையால் கதைக்க முடியவில்லை”,“அவர் தனக்குத் தேவையானதைக் கேட்கிறாரில்லை”, “நிறையச் சொற்களைச் சொல்லுறார், ஆனால் இரண்டு சொற்களைச் சேர்த்துக் கதைப்பதில்லை” “தன்ரபாட்டில கதைக்கிறார் ஆனால் நாங்கள் ஏதேனும் கேட்டால் பதில் சொல்லுறாரில்லை”, “அர்த்தமில்லாமல் சும்மா ஏதோ கதைக்கிறா” “சொன்னதையே திரும்பத் திரும்பச் சொல்லுறார்” போன்ற பல்வேறுபட்ட முறைப்பாடுகளைப் பெற்றௌர் முன்வைப்பதனை நாம்  சாதாரணமாக அவதானிக்கலாம்.
Read more