ஓட்டிசம் பிள்ளைகளில் சிலர் எதையாவது வாய்க்குள் வைத்துக் கடித்தவாறு இருப்பதை நாம் அவதானிக்க முடியும். இது ஓட்டிசத்தின் இயல்புகளில் ஒன்றாகும். அவ்வாறானபிள்ளைகள் வாய் மற்றும் பற்களில் ஏற்படும் புலன் தூண்டல்கள் காரணமாக, அல்லது அவர்களது மனதில் அவ்வப்போது ஏற்படும் பதகளிப்பு உணர்வினைக் குறைப்பதற்காக இந்தவாறான நடத்தையில் ஈடுபடுகிறார்கள். இவ்வாறானதொரு நடத்தைக்கான மாற்றீடாக நாங்கள் Chewy Tube இனைப் பயன்படுத்தலாம். அத்துடன் Chewy Tube இனை பிள்ளையின் வாயுடன் தொடர்புற்றிருக்கும் தசைகளின் அசைவியக்கத்தினைச் சீராக்குவதற்கும் உபயோகிக்கமுடியும்.